திமுக அரசின் சாதனைகள் துண்டுபிரசுரம் விநியோகம்

விளாத்திகுளம், பிப். 27: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற முன்னெடுப்பின் மூலம் திமுக அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்களை தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள் தோறும் கொண்டு சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் விளாத்திகுளம் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் அருங்குளம், மற்றும் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் 2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் மற்றும் இரண்டரை ஆண்டுகால திமுக அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. விளாத்திகுளம் தொகுதி பார்வையாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அன்புராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் அருள்ராஜ், அயலக அணி துணை அமைப்பாளர் டேவிட்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதிசங்கர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சபரிநாதன், வார்டு செயலாளர் ஜெய்சங்கர் உட்பட ஒன்றிய திமுக மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்