திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

 

காரிமங்கலம், ஏப்.21: காரிமங்கலம் மேற்கு ஒன்றியம், ஜிட்டான்டஅள்ளி மற்றும் முருக்கல்நத்தம் ஆகிய பகுதிகளிலிருந்து, தக்காளி மண்டி உரிமையாளர் மதியழகன், ஐஸ்வர்யா சங்கர் உட்பட 25க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் சிதம்பரம், மாரிமுத்து, செல்வம், வெங்கடாசலம், பவுன் நேசன் குமார், முனிராஜ், ஏழுமலை, சங்கர், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்