திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நோட்டீஸ் விநியோகம்

திண்டுக்கல், பிப். 16: மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து நேற்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் அழகர்சாமி, போக்குவரத்து கழக பொது செயலாளர் பொன் செந்தில், தலைவர் மணிவேல், பொருளாளர் மணிகண்டன் தலைமையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு