திண்டுக்கல்லில் கேரம் போட்டி

 

திண்டுக்கல், பிப். 18: திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் ஏகலைவன் கேரம் அகாடமி சார்பில் முதலாம் ஆண்டு சீனியர் கேரம் சாம்பியன் ஷிப் போட்டி நேற்று துவங்கியது. 2 நாட்கள் சீனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, பொது நிலை இரட்டையர் பிரிவு, சீனியர் பெண்கள் ஒற்றையர் பிரிவு என போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் துவக்க விழாவிற்கு மாவட்ட கேரள சங்க தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

ஏகலைவன் கேரம் அகாடமி தலைவர் நாகேந்திரன், துணை தலைவர் கிறிஸ்டி வினோத் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் ஏஎஸ்பி சிபின் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.4000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.1000 இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.8000, மூன்றாம் பரிசு ரூ.4000, நான்காம் பரிசு ரூ.2000 வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் பார்த்தசாரதி, மாநகர அமைப்பாளர் காளீஸ்வரன், கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயக்குமார், மாநகர துணை அமைப்பாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதி போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.

Related posts

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண்

ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு சென்றதால் வீட்டின் பூட்டை திறந்து ரூ.2.30 லட்சம், 2 சவரன் நகை திருட்டு