தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் உலக காடுகள் தின விழா கொண்டாட்டம்

 

தா.பழூர், மார்ச் 22: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக காடுகள் தின விழா வேளாண் கல்லூரி மாணவிகள் மூலம் கொண்டாடப்பட்டது. தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் உலக காடுகள் தின விழாவை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் பிலோமின் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் காடுகள் வளர்ப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விரிவாக கூறினர். மேலும் மரம் நடுதல் பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் மாணவர்களுடன் உரையாடினர். காடுகள் தினத்தை ஒட்டி மரக்கன்றுகளை மாணவ மாணவிகளுடன் சேர்ந்து ஊரக வேளாண்மை பணி அனுபவத்தில் உள்ள மாணவிகளும் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, அபிராமி, அம்பிகா லட்சுமி, அர்ச்சனா, ஆர்த்தி, புவனா, புவனேஸ்வரி, போனிஷா, பூமிகா, புவனா ஆகிய ஊரக வேளாண்மை பணி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்