தாய் மாயம்: மகன் போலீசில் புகார்

கண்டாச்சிபுரம், ஏப்.13: விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள கஸ்பா காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் அய்யனார் (34), இவரது தாயார் சுபத்திரை (55). அய்யனார் கடந்த 7ம் தேதி அவரது தாயாரை வேலை செய்ய சொல்லி திட்டியுள்ளார். இதில் கோபமடைந்த சுபத்திரை கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வீடு வரவில்லை. மேலும் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மகன் அய்யனார் நேற்று கெடார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிந்து சுபத்திரையை தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்