தாயில்பட்டியில் தேசிய தொழுநோய் தடுப்பு முகாம்

ஏழாயிரம்பண்ணை, அக்.20: வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழு நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட தொழுநோய் ஒழிப்பு துணை இயக்குநர் யமுனா தலைமை தாங்கினார். மேலும் வட்டார மருத்துவ அலுவலர் செந்தட்டிக்காளை, பள்ளிகள் நல மருத்துவர்கள் ஆகியோர் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் உடல் ஊனத்தடுப்பு பயிற்சி அளித்தனர்.

அனைவருக்கும் மருத்துவ உபகரணங்கள், மாத்திரைகள் வழங்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தோல் நோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில், தொழுநோய் துணை இயக்குநர் திருப்பதி, அலுவலக மருத்துவ மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது