தர்மபுரி கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை

தர்மபுரி, ஆக. 3: தர்மபுரி கோட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் ஓரிரு தினங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்க இருப்பதாக அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை, அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடியை பறக்க விட்டு கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவருக்கும் இந்திய தேசியக் கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு, தர்மபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு உள்ளது.

இதன் விலை ₹25 மட்டுமே. இதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. இந்திய தேசியக் கொடியை https://www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்-லைனில் ஆர்டர் செய்யலாம். தேசியக்கொடி தபால்காரர் மூலமாக வீடுகளுக்கு பட்டுவாடா செய்யப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில், தேசியக்கொடியை ₹25 செலுத்தி பெற்றுக்கொண்டு, சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து