தமிழ்நாடு வேளாண் பல்கலை நாளை முதல் கவுன்சலிங்

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பெறப்பட்டன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்பட்டது. பிப்ரவரி 11ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கலந்தாய்வு நாளை துவங்கி மார்ச் 26ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நாளை (23ம் தேதி) காலை பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. 24ம்  தேதி தொழில்முறைகல்வி பிரிவினர், 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை அரசு பள்ளிகளில் படித்த 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நடக்கிறது. மேலும், பொது கலந்தாய்வு ஆன்லைன் மூலம் வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இட ஒதுக்கீடு மார்ச் 2ம் தேதி ஆன்லைன் முறையில் நடக்கிறது. மேலும், மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்….

Related posts

புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

வெயிலால் கருகிய நெல், காய்கறி பயிர்கள்: விவசாயிகள் வேதனை

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்