தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி

 

திருவாரூர், மார்ச் 11: திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகே எஸ்.எஸ்.நகரில் திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க ‘சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு தொடங்கி வைத்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு திருவாரூர் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.இக்கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியில் அனைத்து துறைகளின் காட்சி அரங்குகள் இடம் பெற்றுள்ளது. தினந்தோறும் கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு புகைப்படக்கண்காட்சியில் அனைவருக்கும் அனுமதி இலவசமாகும்.

இந்த அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் அறிந்துகொள்ள இப்புகைப்படகண்காட்சி பயனுள்ளதாக இருக்கும்.இந்நிகழ்வில், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், பணி நியமன குழு உறுப்பினர் பிரகாஷ், உள்ளிட்ட அனைத்து அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்