தமிழக மீனவர்கள் 22 பேர் கைது இலங்கை அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்

திண்டிவனம், ஜூன் 23: தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்த இலங்கையின் சிங்கள கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மீன்கள் கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகள் ஆகும். அங்கு சென்று மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் கொடுமைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். எனவே, இந்தியா – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை உடனடியாக கூட்டி சாதகமான முடிவை எடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்தலாம்: மாநகராட்சி அதிகாரி தகவல்

தடுமாறி கீழே விழுபவர்கள் சக்கரத்தில் சிக்காமல் தடுக்க 1,315 மாநகர பேருந்துகளின் பக்கவாட்டில் தடுப்பு கம்பி: மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை

நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள் போதிய இருப்பு உள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்