தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இருக்கைகள் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தலைமையில் பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக கூடுகிறது. ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத்த்தலைவர் யார்? என்பது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி, நேற்றையதினம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே நேற்றைய தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். 2-ம் நாளான இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வந்திருந்த மூத்த உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.பி. உதய குமார், அன்பழகன், வேலுமணி, ஆகியோர் சுமார் 9 மணி அளவில் சட்டப்பேரவை வளாகத்தில் வந்திருந்ததினர். தற்போது அவர்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு-வை அவரது அறையில் கூட்ட சேர்ந்து சந்தித்துள்ளனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இருக்கைகள் மாற்றம் மற்றும் பொறுப்புகள் ஒப்படைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சியில் இருந்து நேரடியாக சபையிலோ அல்லது தனிப்பட்ட முறையில் என்னிடம் நேரடியாகவோ கேட்டல் அதற்க்கு பதில் சொல்ல தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. …

Related posts

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: ஜெயக்குமார்

அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் 20ம் தேதி ஆலோசனை: சென்னையில் நடைபெறுகிறது

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை: டிடிவி தினகரன் விமர்சனம்