தமிழக அரசு சார்பில் வெளிநாடு செல்லும் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு

பெரணமல்லூர், ஏப்.22: பெரணமல்லூர் அருகே தமிழக அரசு அழைத்து செல்லும் வெளிநாடு சுற்றுலாவிற்கு தேர்வு பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் மாணவர்களின் தனித் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்க கல்வி சாரா போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதில் இலக்கிய போட்டி, வானவில் மன்றம் மூலம் அறிவியல் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. அதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி மாநில அளவில் வானவில் மன்ற அறிவியல் போட்டி சென்னையில் நடைபெற்றது.

இதில் செய்யார் கல்வி மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் மேல்நந்தியம்பாடி நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் தருண்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து தமிழக சார்பில் வெளிநாடு சுற்றுலா செல்லும் வாய்ப்பு அந்த மாணவனுக்கு கிடைத்தது. நேற்று மாலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், மேற்பார்வையாளர் ராஜா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கோடீஸ்வரி வரவேற்றார். இதையடுத்து செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் நளினி பள்ளிக்கு வந்து வெளிநாடு செல்லும் மாணவன் தருண்குமாருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். மேலும் மாணவனை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். ஆசிரியை சோபியாமேரி நன்றி கூறினார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்