தமிழகம் முழுதும் நாளை ஒரு லட்சம் இடங்களில், 31வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுதும் நாளை ஒரு லட்சம் இடங்களில், 31வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி, 2021-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது. வழக்கமான மையங்களில் மட்டும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவந்தது. இந்நிலையில், தற்போது தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியதை தொடர்ந்து, மாதத்தில் ஒருநாள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, 31வது மெகா தடுப்பூசி முகாம், ஒரு லட்சம் இடங்களில் நாளை நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்….

Related posts

மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்குகளால் இருளில் மூழ்கும் சாலைகள்: சீரமைக்க கோரிக்கை

வாடிக்கையாளர் போல் நடித்து நகை கடையில் திருடிய பெண் கைது

பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை