தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் விருந்தினர் விரிவுரை விழா

 

காஞ்சிபுரம், ஆக.27: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மின்னணு தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், விருந்தினர் விரிவுரை விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் மனுவேல் ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் பி.மணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிஎஸ்என்எல் முதன்மை பொறியாளர் கே.எம்.பாலாஜி கலந்துகொண்டு, மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப தகவல்களை, எப்படி பயன்படுத்தி இன்னும் மக்களுக்கு பயனுள்ளதாக ஆக்கலாம் என்பது குறித்து தகவல் தொழில்நுட்ப மாணவ – மாணவிகள் மற்றும் அறிஞர்களுக்கு எடுத்துரைத்தார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்