தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு

திருமங்கலம், ஏப்.11: திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு படையினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருமங்கலம் அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த இடத்தில் பெரிய அளவிலான தொட்டி அமைந்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த பகுதியில் மேயவந்த ஆண் மயில் தோட்டத்தில் இருந்த பாம்பை விடாமல் துரத்தியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தவறி தண்ணீர் அதிகமிருந்த அந்த தொட்டியில் விழுந்து தத்தளித்துள்ளது. இதனை கண்ட தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சிலர் திருமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் கீழக்கோட்டை கிராமத்திற்கு சென்று தனியார் தோட்டத்து தொட்டியில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த ஆண் மயிலை மீட்டனர். பின்னர் திருமங்கலம் வனத்துறையில் மயிலை ஒப்படைத்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு