தஞ்சாவூர் அருகே தூய்மை விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தூய்மை விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மைப் பணி நடைபெறுகிறது. தஞ்சாவூர் அருகே நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட சாரதா நகர், கபிலன் நகர் உள்ளிட்ட 19 நகர்களை உள்ளடக்கி திருவள்ளுவர் குடியிருப்போர் நலச்சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கம் மற்றும் கிரீன் லேண்ட் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் மாணவிகள் சார்பில் தூய்மை விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணிகள் நடைபெற்றது. தூய்மையை பேணுவோம், இயற்கை போற்றுவோம் என்ற பதாகை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி நடத்தப்பட்ட பேரணி மற்றும் தூய்மை பணி, நகர் மக்களிடையே கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு தொடர்ந்து நகர்கள் தூய்மையோடு விளங்க வழிவகுத்தது. மேலும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து , தூய்மைப்பணியாளர்கள் துணையுடன் தெருக்களில் புதர்கள் அழித்தல், மரக்கிளைகள் வெட்டுதல், நெகிழி குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை சங்கத்தலைவர் மதியரசு, செயலர் தனுஷ்கோடி, பொருளாளர் பன்னீர்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை