தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்ற 2 விவசாயிகள் லாரி மோதி பலி

திருவிடைமருதூர் : தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்ற 2 விவசாயிகள் லாரி மோதி பலியாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் மாமுண்டி (70), மாணிக்கம் (65). விவசாயிகளான இருவரும், நேற்றுமுன்தினம் மாலை திருவிடைமருதூர் அருகே ஆடுதுறைக்கு பஸ்சில் வந்தனர்.பின்னர் எஸ்.எஸ் நகரில் உள்ள உறவினர் ரத்தினம் வீட்டிற்கு செல்வதற்காக ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி பள்ளி முன்பு பஸ்சிலிருந்து இறங்கினர்.அப்போது அங்கிருந்து சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே சென்ற லாரி இருவர் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு