தக்காளி கிரேடு ₹400க்கு விற்பனை

 

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.11: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில், கிராம பகுதிகளில் தக்காளி பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக முத்தனூர், மணியம்பாடி, புளியம்பட்டி, சில்லாரஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, துரிஞ்சிப்பட்டி, ராமியம்பட்டி அண்ணாமலை அள்ளி, விழுதைப்பட்டி, பொம்மிடி, கதிரிபுரம், மெணசி, ஆலாபுரம், மோளையானூர், போதக்காடு புதூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர்.

பறித்த தக்காளிகளை கடத்தூர் தக்காளி மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி ₹300 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை உயர்ந்து, ₹400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்