தக்கலை அருகே கடன் பிரச்னையால் வாலிபர் தற்கொலை

குமாரபுரம், நவ.18: தக்கலை அருகே மருதூர்குறிச்சி வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் விமல் சிங் ( 27). கொத்தனார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அனிஷா (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது வாழ்நாளின் கனவான வீடு கட்டி உள்ளார். இதற்காக பலாிடம் கடன் வாங்கி இருந்தார். தினசரி வேலைக்கு சென்றும், அவருக்கு கடன் சுமை அதிகமானது. இதனால் குடிப்பழக்கத்திற்கு உள்ளானார். மனைவி மூன்று மாத கர்ப்பிணி ஆன பின் இவரது கடன் சுமை அதிகரித்தது. நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு அவரது அறைக்கு சென்றவர். மாலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாத நிலையில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது மனைவியின் பட்டு சேலையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதைக் கண்ட குடும்பத்தினர் கதறினர். தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்