டொயோட்டா இனோவா ஹைபிரிட்

டொயோட்டா மோட்டார்ஸ், இந்த ஆண்டில், அர்பன் குரூசர் ஹைரைடரை தொடர்ந்து மற்றொரு காரை சந்தைப்படுத்த உள்ளது. தனது பிரபலமான இனோவா காரை, ஹைபிரிட் பவருடன் அறிமுகம் செய்கிறது. இதற்கு இனோவா ஹைகிராஸ் என பெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியச் சந்தைக்கு இந்த மாத இறுதியில் வரும் என கூறப்படுகிறது. மேலும் தெற்காசிய நாடுகள் சிலவற்றிலும் ஒரே நேரத்தில் இது அறிமுகமாகும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த காரின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது சந்தையில் உள்ள டொயோட்டா இனோவா கிரிஸ்டாவில் இருந்து இது வேறுபட்டு காணப்படுகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைரைடரில் உள்ள ஸ்டிராங் ஹைபிரிட் பவர் ட்ரெயின் இடம்பெற்றிருக்கும் எனவும், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, சன்ரூப், வென்டிலேட்டுடன் கூடிய சீட்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

மகிந்திரா எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ

ஜீப் மெரிடியன் எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்

காவாசாக்கி நிஞ்சா இசட்எக்ஸ்-4 ஆர்ஆர்