டூவீலர் திருடிய வாலிபர் கைது

திண்டுக்கல், செப். 20: திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் விமல் அருள்ராஜ் (34). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் உழவர் சந்தை அருகே தனது டூவீலரை நிறுத்திவிட்டு மீன் கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் விமல் அருள்ராஜ் புகார் செய்தார். அதன் பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் டூவீலர் திருடி சென்றது குஜிலியம்பாறை பிரபகவுண்டம்பட்டியைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து உமா மகேஸ்வரனை தாலுகா போலீசார் கைது செய்து அவரிடமிருந்து திருடிய டூவீலரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்