டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி ஐடி பெண் ஊழியர் பரிதாப பலி

சென்னை: கொளத்தூர், மகாலிங்கம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் கீர்த்தனா (24). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்று காலை தனது தந்தையுடன் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் மாம்பாக்கம் – மேடவாக்கம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். பொன்மார் பகுதியை கடக்கும்போது பின்னால் வந்த டிரெய்லர் லாரி ஓட்டுநர் ஹார்ன் அடித்துள்ளார். உடனே, மணிவண்ணன் பிரேக் பிடித்துள்ளார். மண் சறுக்கி நிலை தடுமாறி சாலையின் வலது புறத்தில் கீழே விழுந்தனர். இதில், பின்னால் இருந்த கீர்த்தனா கீழே விழுந்தார். அப்போது, அதிவேகமாக வந்து கொண்டிருந்த டிரெய்லர்  லாரி சக்கரம் கீர்த்தனா தலைமீது ஏறி இறங்கியது. இதில், அவர்  தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை மணிவண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். …

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி