டிட்டோ- ஜாக் உண்ணாவிரதம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், டிட்டோ- ஜாக் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில், மாவட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோ -ஜாக்) சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாரப்பன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். அனைத்து சங்க மாவட்ட நிர்வாகிகள் அருண்பிரகாஷ், லோகேஷ், அருணாசலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் துவக்கி வைத்து பேசினார். தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமைமைய வலியுறுத்தும் அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related posts

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கு

புதியம்புத்தூர் அருகே யூனியன் பள்ளியில் கோள்கள் திருவிழா

திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில் உடன்குடியில் அடிப்படை வசதி நிறைவேற்ற வலியுறுத்தி மனு