டிஜிபி சுற்றறிக்கைப்படி ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போலீசாரே அனுமதிக்கலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை, தென்பழஞ்சியைச் சேர்ந்த தங்கமாயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தென்பழஞ்சி அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த ஆஸ்டின்பட்டி போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். விதிகளை பின்பற்றி அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வீ.சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2019ல் டிஜிபியின் சுற்றறிக்கையில், இதுபோன்ற மனுக்களை அந்தந்த இன்ஸ்பெக்டர்களே பரிசீலித்து உத்தரவிடலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் அதில் கூறப்பட்டுள்ளன. ஆபாச வார்த்தைகள், அசைவுகள் இருக்க கூடாது. சாதி, மத, இன, மொழி உள்ளிட்டவற்றை தூண்டும் வகையில் பேசக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நிறுத்த போலீசாருக்கு  அதிகாரம் உள்ளது. உரிய நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். டிஜிபி சுற்றறிக்கை அடிப்படையில் இன்ஸ்பெக்டர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்….

Related posts

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் வயல்வெளிகளில் புற்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆட்டுக்கிடை போடுபவர்கள் மகிழ்ச்சி

அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை