டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நெல்லை அணி வெற்றி

 

கோவை, ஜூன் 17: டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவைக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணி அபார வெற்றி பெற்றது. 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த 6-வது லீக்கில் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற நெல்லை கேப்டன் அருண் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கோவை அணி வீரர்கள் சச்சின்-சுரேஷ்குமார் களம் இறங்கினர். 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட்டுக்கு 181 ரன் சேர்த்தது. 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் அருண் கார்த்திக், ஸ்ரீ நிரஞ்சன் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய அஜிதேஷ் 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தார். கடைசி ஓவரில் நெல்லை வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓரை முகமது வீசினார். முதல் பந்தில் ஒரு ரன், 2-வது பந்தில் சிக்சரும், 3-வது பந்தில் ஒரு ரன்னும், 4-வது பந்தில் அஜிதேஷ் (112ரன்) அவுட் ஆனார். முடிவில் நெல்லை அணி 6 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை