டாஸ்மாக் பணம் கொள்ளை வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை: திருவாரூர் நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர், மே 26: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் டாஸ்மாக் பணம் கொள்ளை வழக்கில் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம்குடவாசல் தாலுக்கா பிலாவடி கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையின் மேலாளர் மோகன் என்பவரை கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி மர்ம கும்ப கும்பல் ஒன்று கத்தியால் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த மது பாட்டில் விற்பனை தொகை ரூ. 1லட்சத்து 69 ஆயிரத்து 284 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றினை பறித்து சென்றது.

இது தொடர்பாக குடவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பகோணத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன்படி சாக்கோட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்த ராமு மகன்கள் விமல் (22,)மற்றும் விக்னேஷ் (23), குப்பங்குளம் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் கதிரேசன் (36) மற்றும் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சதீஷ்(25) ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளி விமல் என்பவரும் 4வது குற்றவாளியான கதிரேசன் என்பவரும் இறந்துவிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையின் போது மீதமுள்ள குற்றவாளிகள் சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் தலா 4 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ 500 அபராதம் விதித்து நீதிபதி பாலமுருகன் உத்திரவிட்டார். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் குடவாசல் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தண்டனை கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாரை மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் பாராட்டியுள்ளார்.

Related posts

மின்சார ரயில் சேவை ரத்து

சென்னையில் சாலையோர நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

பூங்கா, பொது கழிப்பறைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு