டாஸ்மாக் கடை இடமாற்றம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, மே 23: மதுரையில், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அரசரடி ஹார்வி நகரை சேர்ந்த ராஜ்மோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசரடி ஏஏ ரோட்டில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை மற்றும் பார் செயல்படுகிறது. இந்த மதுபான கடை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால், பெண்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. குடித்துவிட்டு பலரும் மதுபாட்டில்களை தெருவில் வீசி செல்கின்றனர். மது அருந்த செல்வோர் டூவிலர்களை அங்குள்ள வீடுகளின் முன்பு நிறுத்தி செல்கின்றனர். எனவே, இந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை இடமாற்றம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் மஞ்சுளா, குமரப்பன் ஆகியோர், மனுதாரரின் மனுவை பரிசீலித்து அதிகாரிகள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்