ஜெயங்கொண்டம் பகுதி சிவன் கோயில்களில் சிவராத்திரி வழிபாடு

 

ஜெயங்கொண்டம், மார்ச்9: ஜெயங்கொண்டம் பகுதி சிவன் கோயில்களில் நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாடு மற்றும் சிவராத்திரி நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர்.

திருத்துளார் அருளுடைய நாதர்.வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், ஸ்ரீபாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர், இராதாபுரம் வராஹேஸ்வரர் உள்ளிட்ட சிவன்கோவில்களில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி, மஞ்சள் சந்தனம், பால், தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது .

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் ஜெயங்கொண்டம் கழுமாலைநாதர் கோயிலில் நேற்று பிரகார உலா நடைபெற்றது. பின்னர் அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சியின் நான்கு கால பூஜை வழிபாட்டிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை