ஜெயங்கொண்டம் காந்திநகர் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

 

ஜெயங்கொண்டம், ஆக. 11: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளான 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள், இடைநின்ற மாணவர்கள், முற்றிலும் பள்ளியில் சேராத மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பானது வட்டார அளவில் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் வாயிலாகவும், பள்ளி அளவிலும் அமைக்கப்பட்ட குழுவின் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.

இன்று ஜெயங்கொண்டம் காந்திநகர் பகுதிகளில் வட்டாரக் கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையிலும் , வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கண்ணதாசன் முன்னிலையிலும் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள் குறிஞ்சிதேவி, ஐயப்பன், அந்தோணிசேவியர், சரவணன், இளையராஜா, தாமோதரன், செந்தில், டேவிட் ஆரோக்கியராஜ், சுகன்யா, வட்டார கணக்காளர் நிவேதா, கணினி விபர பதிவாளர் சாந்தி மற்றும் சிறப்பாசிரியர்கள் ரூபி, லில்லி, ஹில்டா, பிரேம் குழந்தை ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி செல்லாக் குழந்தைகளை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கணக்கெடுப்பில் ஜெயங்கொண்டம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவிகளை கண்டறிந்து ,மீண்டும் பள்ளி படிப்பை தொடர ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இக்கணக்கெடுப்பானது நடைபெற்று அதன் விபரங்களை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்