ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனையில் ரூ.51,000 பறிமுதல்

 

ஜெயங்கொண்டம், ஏப்.13: ஜெயங்கொண்டம் அருகே மனகெதி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் நடத்திய வாகன சோதனையில் காரில் வந்தவர் உரிய அனுமதியின்றி எடுத்து வந்த ரூ.51,000த்தை கைப்பற்றி உதவி தேர்தல்நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மனகெதி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை குழுவினர், தாசில்தார் சுசீலா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசி, காவலர் முஹம்மது ஆசிப் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூர் கிராமம், மேலத் தெருவை சேர்ந்த ரெங்கராஜன் மகன் பிரவின்குமார் என்பவர் காரில் வந்தார். தேர்தல் பறக்கும் படையினர் காரை வழிமறித்து சோதனை செய்தபோது, ரெங்கராஜன் வைத்திருந்த ரூ.51,000 பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை கைப்பற்றி அரியலூர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை