ஜாவா 42 பாபர்

ஜாவா நிறுவனம், 42 பாபர் என்ற குரூசர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதன் டெல்லி ஷோரூம் விலையாக சுமார் ரூ2.06 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 30.64 எச்பி பவரையும், 32.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வழக்கமான ஜாவா பைக்குகளை போன்று அல்லாமல், தோற்றத்தில் வேறுபட்டுள்ளது. சிறிய ஹெட்லாம்ப், வித்தியாசமான ஹேண்டில் பார்கள், நெகட்டிவ் எல்சிடி டிஸ்பிளே என இளைஞர்களை கவரும் வகையில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3 வண்ணங்களில் கிடைக்கும். வண்ணத்துக்கு ஏற்ப, மிஸ்டிக் காப்பர் (ரூ.2.06 லட்சம்), மூன் ஸ்டோன் ஒயிட் (ரூ.2.07 லட்சம்) மற்றும் ஜாஸ்பர் ரெட் (2.09 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது….

Related posts

நிசான் எக்ஸ் டிரையல்

ஆடி கியூ7 போல்ட் எடிஷன்

கியா இவி3