சோழவரம் ஒன்றியத்தில் சுடுகாடு அமைத்து தர வேண்டும்; கிராம மக்கள் கோரிக்கை

புழல்: சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட பசுவன்பாளையம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக இங்கு சுடுகாடு வசதி இல்லை. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள கண்ணியம்பாளையத்திற்கு சென்று, இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பசுவன்பாளையம் கிராமத்துக்கு சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹8.5 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பயணி கைது

ஓடும் காரில் தீவிபத்து

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்ட பணிகளை பருவ மழைக்குள் முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு