சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டினியால் பாதிப்பு: 40 ஆண்டுகளில் இல்லாத கடும் பஞ்சத்தால் மக்கள் அவதி

40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியால் சோமாலியாவில் லட்சத்துக்கு அதிகமான மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 4.3 மில்லியன் மக்கள் உணவு, தண்ணீர், இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர். சோமாலியாவில் நான்கில் ஒருவர் பட்டிணியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. சோமாலியாவின் தென் பகுதியில், தண்ணீர் இல்லாததால் ஆடு, ஒட்டகங்கள், செம்மறி ஆடுகள், மாடுகள் மற்றும் கழுதைகள் இறந்து குப்பைகளாக காட்சியளிக்கின்றன. பல ஏரிகளில் தண்ணீர் வறண்டுவிட்டதால் முதலை உள்ளிட்ட நீர்வாழ் விலங்குகளும் உயிரிழந்து வருகின்றன.

Related posts

குவைத்தில் தீ விபத்து: தமிழர் உட்பட 43 பேர் பலி

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!

தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு