சேலம்- ஈரோட்டிற்கு பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது: 6.50 கிலோ பறிமுதல்

ஈரோடு, ஆக. 31: ஈரோடு மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் காவிரிப்பாலம் அருகே போலீசார் சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர், சேலம் மாவட்டம் வெள்ளி சந்தை சேர்ந்த கணேசன் (41) என்பது தெரியவந்தது. மேலும், அவரது பைக்கினை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும், அவற்றை சேலம் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கணேசனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்