செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி

நாகப்பட்டினம்,டிச.25: திருமருகல் பகுதியில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நபர்டு வங்கி உதவியுடன் செயற்கை நகை தயாரிப்பு பயிற்சி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நடந்தது. நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். நபார்டு வங்கியில் மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த் கண்ணா நபார்டு வங்கியின் திட்டத்தை பற்றி விளக்கினார். முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் சக்திவேல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் சுரேஷ் மற்றும் பலர் பயிற்சி நோக்கம் குறித்து விளக்கம் அளித்தனர். பயிற்சியாளர் நிஷாந்தினி மகளிர் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்