செயற்கை கால்கள் வழங்க நிதி திரட்ட போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்த சைக்கிளிங் போட்டி

 

கோவை, நவ. 27:ரோட்டரி கிளப் ஆப் கோவை டவுன் டவுன் மற்றும் சேக்புரோ சார்பில் “ரோட்டோ ரைட் ஆர் ரன் 2023” சைக்கிளிங் போட்டி கோவை அவிநாசி சாலையில் நேற்று நடைபெற்றது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 2026ம் ஆண்டு புதிய ஆளுநராக பதவியேற்க உள்ள செல்லா கே. ராகவேந்தர் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு ஓட்ட சங்கங்கள் மற்றும் கோவை காவலர் பயிற்சி பள்ளியை சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து “ரோடோ ரைட் ஆர் ரன்” திட்ட தலைவர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘‘செயற்கை கால் பொருத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ள 8 -14 வயதுக்குட்பட்ட ஏழை குழந்தைகளுக்கு நிதி திரட்டும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் கிடைக்கும் தொகை அதற்கு பயன்படுத்தப்படும். அடுத்த மாதம் 3ம் தேதி உலக ஊனமுற்றோர் தினத்தில் செயற்கை கால்கள் வழங்கப்படும்’’ என்றார். இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், துணை ஆளுநர் இளங்கோ, டவுன் டவுன் தலைவர் மோகன்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்