செம்மரம் கடத்திய தந்தை, மகன் கைது: 3 டன் செம்மரம் பறிமுதல்

சேத்துப்பட்டு மே 25: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வன சரகத்திற்கு உட்பட்ட அல்லியாளமங்கலம் காப்புக்காடு பகுதியில் தேவி மங்கலம், ஆத்துரை, பெரணம் பாக்கம், மொடையூர் என 1500 ஏக்கரில் காப்புக்காடு அமைந்துள்ளது. இதில் காடு வளர்ப்பு திட்டத்தில் செம்மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொடையூர் குன்று பகுதியில் 25 செம்மரங்கள் கடத்தல் காரர்களால் வெட்டி கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் செம்மர கடத்தலில் ஈடுபட்டவர்களை போளூர் வன அலுவலர் முருகன் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில் சித்தூரில் ஏற்கனவே செம்மரக்கட்டைகள் வெட்டுதல் கடத்துதல் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட சந்தவாசல் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி அவருடைய மகன் மோகன்ராஜ் ஆகியோர் மொடையூர் செம்மர கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இருவரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 3 டன் செம்மரம் பறிமுதல் செய்தனர். வனத்துறை காவலர்கள் நடமாட்டமில்லாத சேத்துப்பட்டு- போளூர் சாலையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அல்லியாலமங்கலம் காப்பு காட்டுக்குட்பட்ட மொடையூர் குன்றில் உள்ள செம்மரங்களை கேரளாவில் இருந்து 2 நபருடன் 10 மரம் அறுக்கும் இயந்திரத்தையும் கொண்டு வந்து செம்மரங்களை துண்டு துண்டாக வெட்டி தரம் கண்டறிய அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒட்டுமொத்த செம்மர கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடிக்கவும், இதுபோன்று திருட்டு நடக்காமல் இருக்க தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்