சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள சமையல் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து…

சென்னை: சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள சமையல் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயால் அருகில் உள்ள இதர கிடங்குகளுக்கு பரவியதில் பலகோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம் செய்யப்பட்டது. மிஸ்டர் கோல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான குடவுனில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் அருகில் இருந்த பிளைவுட் மற்றும் டைல்ஸ் தயாரிக்கும் கடைகளுக்கு  பரவியது. இதனால், தகவல் அறிந்த கோயம்பேடு மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீ அணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பற்றி எரியும் தீயை அணைக்க தீ அணைப்பு துறை வீரர்கள் போராடினர். பலமணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசம் ஆனதாக உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்