சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

சென்னை: சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். திருவலிக்கேணியில் லேடி வெலிங்டன் அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியை நேற்று காலை கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:
பொதுமக்கள் எந்த தடையும் இன்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் வகையில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். சென்னை பெருநகர காவல்துறையுடன் 9 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 7 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் மீதமுள்ள 2 கம்ெபனி ராணுவ வீரர்கள் இன்று வருவார்கள்.

ஒரு தொகுதியில் பல இடங்களில் பதற்றமான வாக்குசாவடிகள் வருகிறது. இதனால் வழக்கமாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பை விட கூடுதலாக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும். அப்பகுதியில் பொதுமக்கள் எளிமையாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யவும் தனியாக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்