செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

 

பாடாலூர், பிப்.9: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடைபெற்றது. தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியங்கள் மீது பற்றும் ஆர்வமும், ஏற்படுத்திடும் வகையில், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்க் கூடல் விழா ஆண்டுக்கு 3 முறை நடைபெறுகிறது.

அதன்படி செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சன்னாசி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தாய்மொழியின் சிறப்பு, பெருமை, இலக்கியம், கவிதை போன்றவற்றை கற்று மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தாய்மொழி தமிழ் உதவும்.

இவ்வாறு அவர் பேசினார். பள்ளியின் தமிழ் இலக்கியத்துறை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார். பள்ளி உதவி தலைமையாசிரியர் பொன்னுதுரை, தமிழ் ஆசிரியைகள் சத்யா, தமிழ்மலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை தெய்வானை வரவேற்றார். தமிழ் ஆசிரியை ஜான்சிராணி நன்றி கூறினார்.

Related posts

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது