செட்டிகுளத்தில் மின்மாற்றி அருகே தீ விபத்து

நாகர்கோவில், மார்ச் 26 : நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் எதிரே காலிமனை உள்ளது. இந்த காலிமனையில் புல்புதர்கள் மண்டி உள்ளது. காலிமனை முன்பு மின்மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அந்த காலிமனையில் உள்ள புல் புதர்களில் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ மின்மாற்றியில் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. மின்மாற்றியில் தீ பிடித்தால் பெரிய விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்விநியோகத்தை நிறுத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அதிகாரி துரை தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று புல்புதர்களில் பிடித்த தீயை அணைத்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி