செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூகநீதிக்கான பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், சமூகநீதிக்கான பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 1995ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் சார்பில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகையும், ஒரு சவரன் பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. இவர்கள், தமிழ்நாடு முதல்வரால் தேர்வு செய்யப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து, நடப்பு 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற்கொண்ட பணிகள், அதன்பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதி உடையவர்கள்.

அவர்கள், தங்களின் விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களின் விண்ணப்பத்தில் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் 15ம் தேதி கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்