செங்கல்பட்டு, நந்திவரம் நகராட்சி பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைக்க வேண்டும்: சட்டப்பேரவையில் எம்எல்ஏ வரலட்சுமி கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசும்போது, செங்கல்பட்டு தொகுதி, செங்கல்பட்டு நகராட்சி, நந்திவரம், கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிகளில் அதிக கட்டிடங்கள் நிறைந்த பகுதியாகவும், அதிகளவு மக்கள் தொகை உள்ள பகுதியாகவும் இருக்கிறது. இதனால் எதிர்கால மக்கள் நலனை கருதியும், பாதுகாப்பு கருதியும் அந்த நகராட்சியில் உள்ள மின் கம்பிகளை புதைவடங்களாக அமைத்து தர வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறுகையில், மின் வாரியத்தின் நிதிநிலை அடிப்படையில், முதல்வர் தரும் ஊக்கமும், அதேபோல் அரசு வழங்கக்கூடிய மானியத்தின் அடிப்படையிலும் இப்போது மின் வாரியம் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே, மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றியமைக்க, தேவையின் அடிப்படையில், எந்ததெந்த இடங்களில், முக்கியம் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு, இப்போது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உறுப்பினர் சுட்டிக்காட்டிய அந்த பகுதிகளும், வரக்கூடிய ஆண்டுகளில் தேவை ஏற்படின் அரசின் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்