சுற்றுலா பயணிகள் பார்வையிட பெரணி இல்லம் கண்ணாடி மாளிகை திறக்கப்பட்டது

 

ஊட்டி, ஜூன் 11: ஊட்டி தாவரவியல் பூங்கா பெரணி இல்லம் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்பட்டது. கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவில் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பல வகையான மலர்கள், பெரணி செடிகள், மரங்கள் மற்றும் கள்ளிச் செடிகள் போன்றவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் மற்றும் பெரணி செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

மே மாதத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், பெரணி இல்லத்திற்குள் அனுமதித்தால் பெரணி செடிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. கூட்டமாக சுற்றுலா பயணிகள் செல்லும் போது, தொட்டிகள் தட்டிவிட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் முதல் பெரணி இல்லம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் வெளியில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டது. உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று குறைந்துள்ள நிலையில், பெரணி இல்லம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகைக்குள் சென்று பல்வேறு வகையான பெரணி செடிகளை அருகில் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related posts

கலெக்டர் அலுவலகம் முன் ஊதியம் கோரி தர்ணா போராட்டம்

நிலுவை தொகை வழங்க கோரிக்கை

சாத்தூர் அருகே கார் மோதியதில் 3 பேர் படுகாயம்