சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம்

ஓசூர், ஏப்.6: ஓசூரில் பிரசித்தி பெற்ற கல்யாண காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணி சுவாமிக்கும், காமாட்சி ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள், கல்யாண சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன், அம்பாள் சாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஓசூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்