சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஆய்வு

குத்தாலம்,டிச.28: குத்தாலம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. குத்தாலம் தாலுகாவாக மாற்றப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் குத்தாலத்தில் இயங்கி வரும் அரசு ஆஸ்பத்திரி அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் இருப்பதாகவும் உடனடியாக அடிப்படை வசதிகளை சரி செய்ய கோரியும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் கடந்த 22ம்தேதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குத்தாலம் அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பானுமதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கூடுதல் மருத்துவமனை கட்டிடங்கள் எக்ஸ்ரே, ஸ்கேன் இயக்க தொழில்நுட்ப வல்லுனர்கள், உதவியாளர்கள், காவலர்கள்,தூய்மை பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது குத்தாலம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அமுதலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்