சீனாவில் உலக பாராபீச் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வீரர்கள் தேர்வு

நாகப்பட்டினம், மே 5: சீனாவில் நடைபெறவுள்ள பாராபீச் உலக சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டிக்கு நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வீரர்கள் தேர்வு நேற்று நடந்தது. பாரா அதாவது உடல் ஊனமுற்றோர்கள் மட்டும் பங்கு பெறும் பீச் உலக சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு போட்டி சீனாவில் வரும் 28ம் தேதி தொடங்கி 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 16 நாடுகளில் இருந்து பாரா வீரர்கள் பங்கேற்பார்கள். கடந்த 2019ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பாரா வீரர்கள் 3 மற்றும் 4வது இடத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களை தேர்வு செய்யும் போட்டி நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் நேற்று காலை நடந்தது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற 10க்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட வீரர்கள் வருகை தந்தனர். பாராலிம்பிக் வாலிபால் பெடரேசன் ஆப் இந்தியா தேர்வு குழுவில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பீச் வாலிபால் குழு சேர்மன் மதன்குமார், கமிட்டி குழு உறுப்பினர் கண்ணன், பயிற்சியாளர் மார்டின்தாஸ், பாராலிம்பிக் சேர்மன் நரேஸ்யாதவ் மற்றும் பலர் வீரர்கள் தேர்வு செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்