சிவத்தையாபுரம் பள்ளியில் கலை இலக்கியதிறன் போட்டி

ஏரல், நவ. 18: சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் இந்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கலை இலக்கியத்திறன் போட்டி நடத்தப்பட்டது. பள்ளி கல்விக்குழு தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கவிதா வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது