சிவத்தையாபுரத்தில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

ஏரல், மார்ச் 3: சிவத்தையாபுரத்தில் நடந்த திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். சாயர்புரம் அடுத்த சிவத்தையாபுரத்தில் சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 பூத் கமிட்டிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச்செயலாளர்கள் வக்கீல் ஆறுமுகப்பெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் அனஸ், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் ரகுராமன் பங்கேற்று முக்கிய ஆலோசனைகள் வழங்கிப் பேசினர். கூட்டத்தில் சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், சாயர்புரம் பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் அறவாழி, வரதராஜ் ஸ்டாலின், சுனில், டூலிப்குமார், மாவட்டப் பிரதிநிதி ஜெயக்குமார், ஒன்றிய இளைஞரணி ராமமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர் அமுதா, மாணவரனி அமைப்பாளர் எபநேசர் பாக்கியசீலன், வார்டு செயலாளர்கள் தங்கராஜ், நாராயணசாமி, சமுத்திரபாண்டி, துரையரசு, சந்தனராஜ் மற்றும் தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு